பா.ஜ.க. அரசு கவிழப் போகிறது: தேர்தலுக்கு ரெடி- சோனியா

Subscribe to Oneindia Tamil

கெளஹாத்தி:

குஜராத்தில் மட்டுமல்ல நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயார் நிலையில்இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

இப்போது நாட்டில் 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநில முதல்வர்களின் மாநாடுகெளஹாத்தியில் நடந்து முடிந்துள்ளது. நேற்று இக் கூட்டத்தில் இறுதி உரையாற்றிய சோனியா காந்தி கூறுகையில்,

பாரதீய ஜனதா கட்சி முகமூடி அணிந்து கொண்டு இதுவரை ஏமாற்றி வந்தது. இப்போது குஜராத்தில் நடந்து வரும்வன்முறைகள் அந்தக் கட்சியின் முகமூடியை அகற்றிவிட்டது. உண்மையான மதவாத முகம் வெளிப்பட்டுவிட்டது.

குஜராத்தில் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவோம் என அக் கட்சி மிரட்டி வருகிறது. குஜராத்தில்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது.

குஜராத் மட்டுமல்ல நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்தாலும் நாங்கள் தயார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.

விரைவில் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவிழும்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதச் சண்டைகளுக்கு இடம் தரவே கூடாது. அதை தடுக்க வேண்டிய முழுப்பொறுப்பு முதல்வர்களுக்கு உண்டு என்றார் சோனியா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+