தெலுங்குதேசம் கட்சிக் கூட்டம் தொடங்கியது: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்?
ஹைதராபாத்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க தெலுங்கு தேசம் கட்சியின்அரசியல் குழுக் கூட்டம் இன்று கூடியது.
மத வன்முறையைத் அடக்காமல் அதை மறைமுகமாகத் தூண்டிவிட்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைநீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கோரியுள்ளது. பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் தான் தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள இரண்டாவது பெரிய கட்சியாகும். இக் கட்சிக்கு 27 எம்.பிக்கள் உள்ளனர்.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் கோரிக்கையை ஏற்க பா.ஜ.க. மறுத்து வருகிறது.
வேண்டுமானால் குஜராத் அரசைக் கலைத்துவிட்டு மோடி தலைமையில் மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்றுபா.ஜ.க. கூறியுள்ளது.
கோவாவில் நடந்து வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாயும், உள்துறைஅமைச்சர் அத்வானியும் இதனைத் தெரிவித்தனர்.
இதனால் எரிச்சலைடந்துள்ளார் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. குஜராத் அரசை கலைக்கவேண்டியதில்லை. பிரச்சனையே மோடி தான். அவர் தலைமையில் தேர்தல் நடந்தால் ரத்த ஆறு தான் ஓடும்.எனவே, அவரை நீக்கியே ஆக வேண்டும் என நாயுடு மீண்டும் கூறியுள்ளார்.
ஆனால், நாயுடுவின் கோரிக்கையை போலியான மதசார்பின்மை என்று பா.ஜ.க. தலைவர்கள் வர்ணித்துள்ளனர்.இதனால் கடுப்படைந்துள்ள நாயுடு மத்திய அரசுடன் நேரடியாக மோதத் தயாராகிவிட்டார்.
இன்று தனது கட்சியின் அரசியல் செயற்குழுவைக் கூட்டியுள்ளார். காலையில் இந்தக் கூட்டம் தொடங்கியது. அதில்பலரும் மத்திய அரசை விட்டு வெளியேறிவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
தனது எம்.பிக்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகராக தெலுங்கு தேசம் சாரிபில் யாரையும் நிறுத்தவும் நாயுடு தயாராக இல்லை என்றுதெரிகிறது. எங்களுக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து வெளியேற நாயுடு முடிவெடுத்தால் பா.ஜ.க. அரசு கவிழ்வது நிச்சயம்
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications