பிரபாகரனைப் பிடிக்கக் கோரும் தீர்மானம்: இன்று சட்டசபையில் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் இன்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்படுகிறது.

புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது பற்றி மனிதாபிமான அடிப்படையில் யோசிப்போம் என பிரதமர்வாஜ்பாய் கூறியிருந்தார்.

இதை எதிர்க்கும் முதல்வர் ஜெயலலிதா பாலசிங்கத்தை இந்தியாவுக்குள் விடக் கூடாது, பிரபாகரனை உடனடியாக பிடிக்க வேண்டும், இந்தியாவுக்குக்கொண்டு வந்து ராஜிவ் கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதத்தில் இன்று பிரபாகரனைப் பிடிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி அதை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் முடிவைத் தொடர்ந்து நேற்று பாண்டிச்சேரி சட்டசபையில் அம் மாநில காங்கிரஸ் அரசும் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.இந்தத் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளித்தது. ஆனால், திமுக நடுநிலை வகித்தது.

இன்று இந்தத் தீர்மானம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்படுகிறது. இத் தீர்மானத்துக்கு காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை ஆதரவுதெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+