சென்னையில் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை
சென்னை:
சென்னை தரமணி பகுதியில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு இடையூறாக இருந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் ரவுடிக் கும்பால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னையில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் சகஜமாகி விட்டன. இரண்டு பேர் பார்த்துக் கொண்டால்,இன்று எங்கு கொள்ளை நடந்தது என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் தரமணி பகுதியில் வியாழக்கிழமை இரவு பயங்கர படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.
தரமணி கபாலி தெருவைச் சேர்ந்த பிரதீப் குமார், அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். அவர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தரமணி பகுதி குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
அப்பகுதியில் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முன்னின்று தீர்ப்பதில் ஆர்வம் உடையவர் பிரதீப்குமார். அவருக்கு அனைத்துக் கட்சியிலும் நண்பர்கள் உண்டு.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதால் பிரதீப் குமாருக்கு அப்பகுதியில் உள்ள ரவுடிக் கும்பல் மூலம் ஆபத்து இருந்துவந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கும் ஒரு கும்பலுக்கும், பிரதீப் குமாருக்கும்பகை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு தனது மனைவி சுசீலாவுடன் வெளியில் போய் விட்டு வீட்டுக்குத்திரும்பி வந்தார் பிரதீப்குமார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 8 மணியளவில் வீட்டை விட்டு அவர் வெளியேவந்தார்.
கருமாரியம்மன் கோவில் அருகே தனது நண்பரைப் பார்க்க பிரதீப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அங்குதிடீரென மின்சாரம் தடைபட்டதையடுத்து, அவரை சுமார் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் சூழ்ந்தது.
இருட்டில் என்ன நடக்கிறது என்று பிரதீப் குமாருக்குத் தெரியவில்லை, ஆனால் தன்னைச் சுற்றி ஒரு கும்பல்சூழ்ந்துள்ளது என்று மட்டும் தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்து ஓட முயன்றார்.
ஆனால் பிரதீப்பைச் சுற்றி நன்ற கும்பல், அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியது. பயங்கரமாக வெட்டப்பட்டபிரதீப் கழுத்து துண்டான நிலையில் அங்கேயே பிணமானார். அவரது இரண்டு கை விரல்களும் துண்டிக்கப்பட்டுசிதைந்து போயிருந்தன.
நடு ரோட்டில் பிரதீப் குமார் கொலையுண்டதைப் பார்த்த பொதுமக்கள் அவரை ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் விரைந்து வந்தனர். கிண்டி துணை கமிஷனர் சத்திரபாண்டியும் சம்பவஇடத்திற்கு வந்தார். செல்வம் என்ற சப்பை செல்வம் என்பவனின் தலைமையிலான ரவுடிக் கும்பல்தான் இதைசெய்திருக்க வேண்டும் என்று போலீசாரும், பொதுமக்களும் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இக்கும்பலைத்தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
பிரதீப் குமார் கொலையையடுத்து தரமணி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதற்றமான சூழ்நிலைநிலவியது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதீப் குமாரின் உடல் வெள்ளிக்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications