திருடனை அடித்துக் கொன்ற பொது மக்கள் மீது வழக்கு
நாமக்கல்:
நாமக்கலில் கூரையைப் பிரித்து வீட்டில் திருட முயன்ற திருடனை மக்கள் கட்டி வைத்து அடித்துக் கொலைசெய்தனர்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள சின்ன வேப்பந்தம் எனப்படும் கிராமத்தில் தெவ்வராய பிள்ளை என்பவர்தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர்கள் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்பகுதியில் வெளிச்சம் வருவதற்காகவேயப்பட்டிருந்த கண்ணாடி உடைபடும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அவர்கள் பார்த்தபோது, ஓர் கரும்உருவம் அந்த கண்ணாடியை உடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
உடனே அவர்கள் குரல் எழுப்பினர். அந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து திருடனை வளைத்துப்பிடித்தனர். திருடனை அங்குள்ள பகவதி அம்மன் கோயில் அருகே இழுத்துச் சென்று கட்டி வைத்துஅடித்துள்ளனர்.
கிராம மக்ககளின் தர்ம அடியைத் தாங்க முடியாத திருடன் அதே இடத்தில் இறந்து விட்டான். இதைப் பார்த்துஅதிர்ச்சியுற்ற மக்கள், பிணத்தை அந்த இடத்திலேயே போட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு ஓடி விட்டனர்.
நேற்று காலை கோயிலருகே காயங்களுடன் கிடந்த பிணத்தைப் பார்த்த வசந்தபுரம் வி.ஏ.ஓவான கணேசன்நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவன் திருடன் என்பதும் மக்கள் அவனை கட்டி வைத்து அடித்துக்கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொது மக்கள் மீது வழக்கு தொடர்ந்து நாமக்கல் போலீசார்விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications