மே 4 முதல் "அக்னி நட்சத்திரம்"
சென்னை:
இந்த ஆண்டு வரும் மே 4ம் தேதி தொடங்கும் "அக்னி நட்சத்திரம்" மே 28ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னைவானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே கோடைக்காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தமிழக மக்களைப்பொசுக்கி வருகிறது.
திருச்சி, கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரை உள்பட தமிழகத்தின் பல நகரங்களிலும் இப்போதே 100 டிகிரிபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் நிலவுகிறது.
வடகிழக்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் தமிழகத்தின் 15 மாவட்டங்கள் தற்போது வறட்சியின் பிடியில்சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வரும் மே 4ம் தேதி தமிழகத்தில் "அக்னி நட்சத்திரம்" ஆரம்பமாகிறது. இதனால் சராசரிவெப்பநிலையே 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சென்னையில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியது.












Click it and Unblock the Notifications