காவிரி: தமிழக அரசின் புகார்களுக்கு கர்நாடகம் மறுப்பு
பெங்களூர்:
காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்று தமிழக அரசுசுமத்தியுள்ள குற்றச்சாட்டை கர்நாடக அரசு இன்று வன்மையாக மறுத்தது.
சமீபத்தில் தமிழக சட்டசபையில் பேசிய தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், காவிரி நடுவர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்று குற்றம்சாட்டினார்.
எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளதாக கர்நாடகநீர்ப்பாசனத்துறை அமைச்சரான பாட்டீல் இன்று கூறினார்.
நடுவர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் 28ம் தேதி வரை 185.7 டி.எம்.சி. தண்ணீரைநாங்கள் திறந்து விட்டுள்ளோம் என்றும் பாட்டீல் கூறினார்.
மேலும் காவிரி கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகளையும் கர்நாடக அரசு மதித்து நடந்து வருவதாகவும் பாட்டீர்தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் 205 டி.எம்.சி. காவிரி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications