நடுக்கடலில் மீனவர்கள் படகுச் சண்டை: 6 பேர் படுகாயம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் உவரி மற்றும் மணப்பாடு ஆகிய இரு மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நடுக் கடலில் படகுகளில் துரத்திதுரத்தி, பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் கரைக்குத் திரும்பினர்.
உவரி மற்றும் மணப்பாடு ஆகிய இரு மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே எப்போதும் ஒத்து வருவது இல்லை.
இந்த இரு கிராம மீனவர்கள் இடையே கரையில் சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரும் மிக பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து பல மீனவர்கள் படகுகளில் ஏறி கடலில் தப்பிச் சென்றனர்.
ஆனால், அவர்களை பிற மீனவர்கள் படகுகளில் விரட்டிச் சென்றனர். இரு தரப்பினரும் நடுக்கடலில் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும்ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கலவரம் தொடர்பாக 300 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீனவர்களின் மோதல் காரணமாக உவரி பகுதியில் மீன் பிடிப்பு நடைபெறவில்லை.
அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications