"அம்மா"விடம் ரூ.6 லட்சம் நன்கொடை வழங்கிய "அண்ணி"
சென்னை:
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் நன்கொடையை முதல்வர் ஜெயலலிதாவிடம் "அண்ணி"மெகா சீரியலில் அண்ணியாக நடிக்கும் நடிகை மாளவிகா அவினாஷ் வழங்கினார்.
ஜெயா டிவி சார்பில் சமீபத்தில் சிறப்பு கோடீஸ்வரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், "அண்ணி" மாளவிகாவும்கலந்து கொண்டார். அவருக்கு அதில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
பரிசு கிடைத்ததும், அந்தத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப் போவதாக மாளவிகாஅறிவித்தார்.
இதையடுத்து வரிப் பிடித்தம் போக கிடைத்த ரூ.5 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்குவழங்கினார்.
நேற்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த மாளவிகா இதற்கானகாசோலையை வழங்கினார். அவருடன் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநர் அனுராதா தினகரன், மின் பிம்பங்கள்நிறுவனத்தின் தயாரிப்பாளர் கீதா கைலாசம் ஆகியோரும் வந்திருந்தனர்.
"அண்ணி"யின் பெருந்தன்மையை "அம்மா"வும் மகிழ்ச்சியுடன் பாராட்டி காசோலையைப் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications