வாணியம்பாடியில் பா.ஜ.க. போட்டி?
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
வாணியம்பாடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதாக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் செய்தியாளர்களிடம் இக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இல. கணேசன் கூறுகையில்,
சைதாப்பேட்டை தொகுதியில் மதிமுகவும், அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பாமகவும் எங்களது ஆதரவைக்கோரியுள்ளன. அவர்களுக்கு ஆதரவு தர எங்களது கட்சி முடிவு செய்யலாம்.
எனவே வாணியம்பாடி தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சி போட்டியிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இருப்பினும் இந்த முக்கிய முடிவுகள் குறித்து வரும் சனிக்கிழமை (நாளை) சென்னையில் நடக்கவுள்ள கட்சியின்பணிக்குழுக் கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications