ஈவ் டீசிங்: 14 வயது மாணவி தற்கொலை - 2 பேர் கைது
சென்னை:
சென்னை சாலிகிராமத்தில் ஈவ் டீசிங்கால் பாதிக்கப்பட்ட 8வது வகுப்பு மாணவி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலைசெய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் மோகன். டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள்சரண்யா. 14 வயதாகும் சரண்யா, விருகம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8வது வகுப்புபடித்து வந்தார்.
மோகன் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த காஜா, அவரது தம்பி நாகூர் மற்றும் இவர்களது நண்பர் முரளி ஆகியமூன்று பேரும் தினமும் சரண்யா பள்ளிக்குச் செல்லும்போது, பின் தொடர்ந்து சென்று கேலி செய்வது வழக்கமாம்.
இதனால் வெறுப்படைந்த சரண்யா, சமீபத்தில் தனது தந்தையும், தாயும் வெளியே சென்று விட்ட நேரம் பார்த்து,வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
இதில் உடல் கருகி அங்கேயே பரிதாபமாக இறந்தார் சரண்யா. விருகம்பாக்கம் போலீசார் இச்சம்பவம் குறித்துவழக்குப் பதிவு செய்து காஜா மற்றும் நாகூர் ஆகியோரைக் கைது செய்தனர். முரளிக்கு வலை வீசப்பட்டுள்ளது.
நடந்த சம்பவம் குறித்து கண்ணீருடன் மோகன் கூறுகையில், நாங்கள் இந்த வீட்டுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான்வந்தோம். எங்களது வீட்டிற்கு அருகில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஷா பாய் என்பவர் குடியிருந்தார்.
அவரது மகன்களான காஜாவும், நாகூரும் அடிக்கடி எனது மகளை தொந்தரவு செய்தனர். அவர்களுடன் முரளியும்சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தான்.
நான் அந்தப் பையன்களைக் கண்டித்து, இதுகுறித்து பாஷா பாயிடமும் புகார் செய்தேன். ஆனால் அவர்களிடம்எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கேலி செய்துகொண்டே இருந்தனர்.
இதற்கிடையே எங்களை வீட்டை விட்டே வெளியேற்ற அந்தக் குடும்பத்தினர் முயற்சி செய்தனர். நானும் பேசாமல்வீட்டைக் காலி செய்துவிட்டு எங்காவது போய்விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் அதற்குள் நன்றாகப் படிக்கக் கூடிய, அமைதியாக இருக்கும் என் மகளின் உயிரைக் காவு வாங்கிவிட்டார்களே என்று கதறி அழுதார் மோகன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications