கே.பி.எஸ். கில்லிடம் குஜராத் ஒப்படைப்பு
டெல்லி:
குஜராத் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்புஆலோசகராக முன்னாள் பஞ்சாப் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் 1980களில் மூண்ட கலவரங்களைத் திறமையாகக் கட்டுப்படுத்திய கில், அசாமிலும் இனக்கலவரங்களை அடக்குவதில் வெற்றி கண்டார்.
குஜராத்தின் சட்ட-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு கில்லை நியமித்துள்ளது. தற்போதுகுஜராத்தில் நடந்து வரும் வன்முறைகளை ஒடுக்குவதில் மோடியிலிருந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும்இனி கில்தான் ஆலோசனை வழங்குவார்.
மோடியின் முதல்வர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் துறை ஆகிய மூன்றும் கில்லின் நேரடிக்கண்காணிப்பில்தான் செயல்படும்.
இன்று குஜராத் வந்து கில் தன்னுடைய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்கிளம்புவதற்கு முன் அவர் உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்தார்.
ராஜ்யசபாவில் இன்றும் விவாதம்:
குஜராத் விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஆரம்பித்து நள்ளிரவு வரைதொடர்ந்த விவாதம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
விவாதம் எப்படிப் போனாலும் ஓட்டெடுப்பு என்று வரும்போது ஆளுங்கட்சிக்கு ராஜ்யசபாவில் தோல்வி நிச்சயம்என்பதால், எதிர்க் கட்சிகளின் தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது.
இதையடுத்து எதிர்க் கட்சிகளின் தீர்மானம் எளிதில் ராஜ்யசபாவில் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய விவாதத்தின்போது குஜராத்தில் 355வது பிரிவை அமல் படுத்தியே தீரவேண்டும் என்று எதிர்க் கட்சிகள்பிடிவாதம் பிடித்தன. ஆனாலும் மத்திய அரசு வளைந்து கொடுக்க ஆரம்பித்ததையடுத்து, மோடியை நீக்கவேண்டும் என்ற தங்களுடைய பிடிவாதத்தையும் தளர்த்தின.
இருந்தபோதிலும் வன்முறைக்குக் காரணமான பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளின்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
மேலும் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்தும், நிவாரண நடவடிக்கைகளை எவ்வாறுமேற்கொள்வது என்பது குறித்தும் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்டது.
ராஜ்யசபாவுக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின்கன்னிப் பேச்சு காரணமாகவே அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணி வரை விவாதம் நீடித்ததையடுத்து, அது இன்றைக்கும் தொடர்ந்து நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்ட பின்னர் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications