பங்களாதேஷில் கப்பல் கவிழ்ந்து 400 பேர் பலி?
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிற்கு அருகில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் சுமார் 400 பேர் இறந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.
டாக்காவில் இருந்து படுகாலி என்ற இடத்துக்கு அந்தக் கப்பல் நேற்று புறப்பட்டது. அதில் சுமார் 400 பயணிகள் இருந்தனர்.
40 கி.மீ தூரத்தில் உள்ள சக்னாத் என்ற இடத்தை கப்பல் அடைந்தபோது பயங்கர சூறாவளிக் காற்று வீசியது. இதில் கப்பல் நிலைதடுமாறியது. பின்னர் சூறாவளியில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதில் பெரும்பாலான பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் சென்ற 15 பேர் மட்டும் தான்நீந்திக் கரை சேர்ந்தனர். இதனால் மற்ற அனைவரும் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications