அதிமுக - முஸ்லீம் லீக் உறவு முறிந்தது
சென்னை:
அதிமுகவுடன் தங்கள் கட்சி வைத்திருந்த உறவு முறிந்து விட்டதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்சுலைமான் சேட் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் மறைவு காரணமாகவே தற்போதுஅத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
எனவே இந்தத் தொகுதியை இந்திய தேசிய லீக்கிற்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பரிசீலனை செய்வதாக அப்போது அவர்உறுதியளித்தார்.
ஆனால் பாரம்பரியமாகவே முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முஸ்லீம்கள் அல்லாத ஒருவரைஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
எங்களுடைய எந்த ஆலோசனையையும் கேட்காமலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதால், அதிமுகவுடனானஎங்கள் உறவை நாங்கள் துண்டித்து விட்டோம்.
முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறிய ஜெயலலிதா, தற்போது அந்தக் கட்சியுடன் உறவுவைத்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருப்பதும் எங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளது.
வாணியம்பாடியில் எங்கள் கட்சி போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார் சுலைமான் சேட்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications