ராகிங்கை தட்டிக் கேட்ட மாணவர் அடித்துக் கொலை
சேலம்:
சேலத்தில் ராகிங் கொடுமையைத் தட்டிக் கேட்ட சாப்ட்வேர் என்ஜினியரிங் மாணவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
சேலம் சூரமங்கலம் தர்மன் நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (19). இவர் மல்ல சமுத்திரம் என்ற ஊரில் உள்ளமகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.எஸ்ஸி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இதே கல்லூரியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற மாணவர், ஜேசுதாஸின் சக மாணவர்களை ராகிங் செய்துள்ளார்.இதை பார்த்துக் கொண்டிருந்த ஜேசுதாஸ், அதை தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், கல்லூரி முடிந்ததும் சக மாணவர்களான கண்ணன், கார்த்தி, ப்ரவீண்மற்றும் கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் ஆகியோரைத் திரட்டிக் கொண்டு சென்று ஜேசுதாஸைஉருட்டுக்கட்டை மற்றும் இரும்புத்தடியால் சரமாரியாகத் தாக்கினான்.
இவ்வளவு பேர் சேர்ந்து நின்று தாக்கியதில் படுகாயமடைந்த ஜேசுதாஸ், உடனடியாக சேலம் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் கைவிரித்ததையடுத்து, அவர் கோயம்புத்தூரில்உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
அங்கு கடந்த ஐந்து நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக நேற்றுகாலை ஜேசுதாஸ் இறந்தார். இது தொடர்பாக ஜேசுதாஸின் பெற்றோர் மல்ல சமுத்திர போலீஸாரிடம் புகார்கொடுத்தனர்.
இதையடுத்து தினேஷ்குமார், கண்ணன், ப்ரவீண்,கார்த்தி உட்பட 9 பேரை மல்ல சமுத்திரம் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications