மாறன் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி தகவலையடுத்து சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாறனும் பாலுவும் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லவிருந்தனர்.விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை டெல்லி செல்வதாக இருந்தது.
இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு ஒரு டெலிபோன் கால் வந்தது.
அதில் பேசியவர், மத்திய அமைச்சர்கள் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டுவைத்து விட்டார். இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.
மத்திய அமைச்சர்கள் இருந்த விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டு எதுவும்கண்டுபிடிக்கப்படவில்லை.
சோதனை நடந்து கொண்டிந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் இருவரும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம்டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மற்ற பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே, வெடிகுண்டு புரளியைக் கிளப்பியவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பொதுத் தொலைபேசிபூத்திலிருந்து பேசியது தெரிய வந்துள்ளது. அந்த நபரைப் பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications