நாகப் பாம்புக்கு ஏ.சி.
சென்னை:
சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நாகப் பாம்பின் அறை குளு குளு வசதிசெய்யப்பட்டுள்ளதாக பூங்கா இயக்குநிர் பி.சி. தியாகி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போது கடுமையான வெயில் காலமாக இருக்கிறது. கோப்ரா என்று அழைக்கப்படும் நாகப் பாம்புகளால் இந்தவெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே உயிரியல் பூங்காவில், நாகப் பாம்புகள் அடைக்கப்பட்டுள்ள அறை குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பூங்காவில் பல்வேறு புதிய வகை விலங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்தசர்க்கஸ் நிறுவனங்களிடமிருந்து பிடிக்கப்பட்டவை இவை.
ஒட்டகச் சிவிங்கி, காட்டெருமை, மான், முதலைகள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டவை. மொத்தம் 39விலங்குகள் வண்டலூர் பூங்காவுக்கு புதிய விருந்தாளிகளாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.
பூங்காவில் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 1 லட்சம்லிட்டர் தண்ணீர் பூங்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாலாற்றிலிருந்து இந்த தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதனால் விலங்குகளுக்கு தண்ணீர்ப் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்றார் தியாகி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications