புதுவையில் கண்ணப்பன் கட்சி காங்கிரசில் இணைந்தது
பாண்டிச்சேரி:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தமிழகப் பிரிவு அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ள நிலையில் அக்கட்சியின்பாண்டிச்சேரி பிரிவு, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், மக்கள் தமிழ்தேசம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து இந்தக் கட்சி போட்டியிட்டாலும், அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச்சந்தித்தது.
தேர்தலுக்குப் பிறகு திமுக அணியிலிருந்து விலகுவதாக அறிவித்த கண்ணப்பன், சிறிது காலத்திற்கு அமைதியாகஇருந்தார். இந்நிலையில், தனது கட்சியை அதிமுகவுடன் இணைக்கப் போவதாக அறிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், பாண்டிச்சேரி பிரிவு மக்கள் தமிழ் தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளது.
இதுதொடர்பாக பாண்டிச்சேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி,மக்கள் தமிழ் தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் அசோக் ஆனந்த் கையெழுத்திட்டார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications