ஊழியர்களின் உரிமைக் குரலை பறிக்கிறார் ஜெ.: கருணாநிதி
சென்னை:
அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும்விதமாகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதாவை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாகவிமர்சித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது போக்குவரத்து துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள்,தலைமைச் செயலக ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் கடுமையான சட்டம்தமிழகத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
இதையும் மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கானசட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களிடமுமே முந்தைய திமுக அரசு சுமூகமாகவே பழகி வந்தது.அவர்களுடைய கோரிக்கைகளும் நியாயமாக முறைகளில் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால் தற்போதைய அதிமுக அரசோ அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல்உள்ளது. இதை எதிர்த்து வேலைநிறுத்தம் போராட்டங்களைக் கூட நடத்த விடாமல் சட்டம் கொண்டு வர முயற்சிசெய்து வருவது வேதனைக்குரியது.
அதிமுக அரசின் ஏதேச்சாதிகாரத்தைத்தான் இந்த சட்ட மசோதா தெளிவாகக் காட்டுகிறது. இந்த சட்ட மசோதாஊழியர்களின் உரிமைக் குரலை நசுக்கி விடும்.
"தொழிலாளர்கள் வாய் திறந்தால் தொலைத்து விடுவோம்" என்று மிரட்டுவது போலவே இந்த சட்ட மசோதாஅமைந்துள்ளது.
உழவர் சந்தை திட்டத்திலிருந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டம் வரைதிமுகவின் அனைத்துத் திட்டங்களையும் முடக்கி வைத்த அதிமுக அரசு, தற்போது கிராமங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மினி பஸ்களை நிறுத்தட்டும் பார்ப்போம் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications