அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்யத் தடை: மீறினால் சிறை- தமிழகத்தில் கடுமையான சட்டம்
சென்னை:
அரசு ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தலைமைச்செயலக ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் கடுமையான சட்டம் தமிழகத்தில்கொண்டு வரப்படவுள்ளது.
இதையும் மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கானசட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் வினியோகச் சட்ட விதிமுறைகளின் கீழ் இந்தக் கடும் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள்அடுத்தடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைததனர்.
தற்போதும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசைமிரட்டி வருகின்றனர்.
இந் நிலையில் இவர்களுடைய இந்த வேலை நிறுத்தத்தைத் தடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் சட்ட மசோதாஇன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் நிதியமைச்சர் பொன்னையன் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இதன்படி, அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மட்டுமில்லாமல் ரேஷன் கடை ஊழியர்கள், பால்மற்றும் குடிநீர் வினியோகத்துறை ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள், துப்புறவு ஊழியர்கள், மாநகராட்சிஊழியர்கள் ஆகியோர் உள்பட பல அத்தியாவசியப் பொருட்களை வினியோகிக்கும் ஊழியர்களும் இனிவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியாது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மட்டுமல்லாமல் அதற்கு ஆதரவு தருபவர்கள், போராட்டத்தைத் தூண்டுபவர்கள்,போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சக ஊழியர்கள் வற்புறுத்துபவர்கள் ஆகியோர் மீதும் இச் சட்டத்தின் படிநடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அதைத் தூண்டுபவர்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனைதரப்படும். அல்லது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையுடன்அபராதமும் சேர்த்தே விதிக்கப்படும் என்று இச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர்களையும் இந்தச் சட்டம் கடுமையாகத் தண்டிக்கும்.
வேலைநிறுத்தம் செய்யப் போகிறோம் என்று ஊழியர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்தாலும் அதை இனிஅரசு ஏற்காது என்றும் இச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்ய மறுப்பதும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குஇணையானதாகவே கருதப்பட்டு இதே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் உள் இருப்புப் போராட்டத்தையும் தமிழக அரசு தடை செய்துள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மசோதாவை திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களது கடும்எதிர்ப்பையும் மீறி இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
திமுக எம்.எல்.ஏக்கள் இந்த மசோதவைை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகக் கூறி அரசைக் கண்டித்து கோஷம்எழுப்பினர்.
இது அரசு ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும் என்று கூறிய பாமக எம்.எல்.ஏக்கள், இந்தச்சட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத ஜெயலலிதா மசோதாவை தொடர்ந்து தாக்கல் செய்யுமாறுபொன்னையனிடம் கூறினார்.
அரசின் இந்தச் சட்டத்தின் மூலம் இனி அரசு ஊழியர்கள், குறிப்பாக பஸ் ஊழியர்கள் நினைத்தபோதெல்லாம்ஸ்டிரைக் செய்ய முடியாது.
இச் சட்டம் பொது மக்களுக்கு பெரும் நன்மைகளைத் தரும் என்பது நிச்சயம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications