பிரேசில் சென்றார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலக மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிரேசிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
உலக மாநகராட்சி மேயர்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த மேயர்கள் மாநாடு பிரேசிலில் இன்றும் நாளையும்நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்வதைத் தடுக்க அதிமுகவைச் சேர்ந்த சிலரின் முயற்சி பலனளிக்காமல்போனது.
ஒரு வழியாகத் தமிழக அரசின் அனுமதியைப் பெற்ற ஸ்டாலின், நேற்று சென்னையிலிருந்து லண்டன் வழியாகச்செல்லும் விமானத்தில் பிரேசிலுக்குக் கிளம்பினார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திமுக எம்.எல்.ஏக்கள், திமுக பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள்ஸ்டாலினை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications