ஜெ.வின் துணிச்சல்: ராம கோபாலன் பாராட்டு
விழுப்புரம்:
வாணியம்பாடி சட்டசபை இடைத் தேர்தலில் முஸ்லீம் அல்லாத வேட்பாளரை நிறுத்தியுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் முடிவு மிகவும் துணிச்சலான ஒன்று என இந்து முன்னணிஅமைப்பாளர் ராம கோபாலன் கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
வாணியம்பாடியில் பெரும்பாலும் முஸ்லீம்களே இருந்து வருகிறார்கள் என்பது உண்மையே. இருப்பினும்வாணியம்பாடி நகருக்கு வெளியே ஊரகப் பகுதிகளில் பெரும்பான்மையானோர் இந்துக்களே.
எனவே இந்துக்களின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்து வாணியம்பாடி தொகுதியில் இந்து வேட்பாளரைநிறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவரின் இந்தத் துணிச்சலான முடிவை நான் மதிக்கிறேன், பாராட்டுகிறேன்.
வாணியம்பாடி தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சி போட்டியிடவில்லை. எனவே அத்தொகுதியில் போட்டியிடும்அதிமுகவை எங்களது அமைப்பு ஆதரிக்கும் என்றார் ராம கோபாலன்.












Click it and Unblock the Notifications