3 தொகுதிகளையும் பிடிக்க வரிந்து கட்டும் அதிமுக
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறிக்க வரிந்து கட்டிக் கொண்டு களம்இறங்கியுள்ளது அதிமுக.
திமுகவின் கோட்டை என்று கருதப்படும் சைதாப்பேட்டை தொகுதியில் நடிகர் ராதாரவியை களம் இறக்கியுள்ளதுஅதிமுக. இந்தத் தொகுதியை எப்படியும் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேகத்தில் எட்டு அமைச்சர்கள்தலைமையில் பிரசாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளஇந்த அமைச்சர் படையில் பொன்னையன், ஜெயக்குமார், துரைராஜ், நயினார் நாகேந்திரன், எம்.ஜி. சம்பத், அனிதாராதாகிருஷ்ணன் மற்றும் சுதர்சனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர ஐந்து எம்.பிக்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 23 பேர் தேர்தல் பணிக்குழுவில் உள்ளனர்.
சைதாப்பேட்டையை வெல்வது கெளரவப் பிரச்சினை என்று "அம்மா" தரப்பில் தேர்தல் பணிக்குழுவினரிடம்அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். எனவே 23 பேர் கொண்ட இந்தப் படை தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாம்.
வழக்கமாக வேட்பு மனுவை சில நாட்கள் கழித்துத்தாதன் தாக்கல் செய்வார்கள். ஆனால் சைதாப்பேட்டையிலும்,வாணியம்பாடியிலும் - ஏன் அச்சிறுப்பாக்கத்தில் கூட - அதிமுக வேட்பாளர்கள்தான் முதல் ஆளாகவேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சூட்டோடு சூடாக, சைதாப்பேட்டையில் நேற்று (திங்கள்கிழமை) மாலையே எட்டு அமைச்சர்களும் கலந்துகொள்ளும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. தேரடி வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நடிகர்ராதாரவியை அறிமுகப்படுத்தி அமைச்சர்களும், எம்.பிக்களும் பேசினர்.
அதைத் தொடர்ந்து அதிமுகவின் பல்வேறு பிரிவு தலைவர்களும் பிரசாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளனர்.
வாணியம்பாடியைப் பொறுத்தவரை இந்த முறை அதிமுகவே நேரடியாக களம் இறங்கியுள்ளது. கட்சியின்விவசாயப் பிரிவுத் தலைவரான வடிவேலுவையே முதல்வர் ஜெயலலிதா இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், தேர்தல் பணிகளைக் கவனிக்கவும் ஏழு அமைச்சர்கள் அடங்கியமற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தம்பிதுரை தலைமையிலான இந்தக் குழுவினர் வடிவேலுவின் வெற்றிக்காக அயராதுஉழைக்கவுள்ளனர். முஸ்லீம் தலைவர்களைச் சந்தித்து வாக்குகள் கேட்பதற்கு வசதியாக முன்னாள் அச்ைசர் அன்வர்ராஜாவும் குழுவில் இடம் பிடித்துள்ளார்.
உச்சகட்டமாக சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் இம்மாத இறுதியில் ஜெயலலிதாவும் நேரடியாக வந்துபிரசாரம் செய்யவுள்ளார். அச்சிறுப்பாக்கம் தொகுதியிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள அதிமுக முடிவுசெய்துள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications