ஆண்டிப்பட்டி அருகே பலே போலி சாமியார் கைது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ரூபாயை இரட்டிப்புச் செய்து தருவதாக கூறி ஏமாற்றி வந்த போலி சாமியாரை தேனிமாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது ராஜதானி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி. இவர்சாமியார்களுக்கே உரித்தான குறி சொல்வது போன்ற வேலைகளைச் செய்து வந்தார். தன்னை நாடி வரும்பக்தர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால் அதை ரூ.5 லட்சமாக மாற்றித் தருவேன் என்று கூறியுள்ளார்.
முத்துமணியின் வார்த்தைகளை கேட்ட பலர் கனவில் மிதந்தனர். ஆஹா, வேகமாக பணக்காரராக மாறும் வழியைஅல்லவா சாமியார் சொல்கிறார் என்று பேராசைப்பட்டனர். இதையடுத்து கடன் வாங்கியும், வீட்டிலிருந்தநகைகளை விற்றும் பணம் சேர்த்து முத்துமணியிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.
பணத்தை வாங்கிய முத்துமணி அவற்றை ஒரு உண்டியல் போன்ற கலத்தில் போடச் செய்துள்ளார். பின்னர் அதைத்துணியால் மூடி, இதை வீட்டுக்கு எடுத்துப் போங்கள். சில நாட்கள் கழித்து திறந்து பாருங்கள், உங்களது பணம்எனது மந்திர சக்தியால், இரட்டிப்பாகியிருக்கும், சில நேரங்களில் மும்மடங்காயிருக்கும் என்று கூறி விபூதிகொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு உண்டியலைத் திறந்து பார்த்தவர்கள் அதிர்ந்தனர். அவர்கள் கொடுத்தபணம் மொத்தம் அங்கு இல்லை, மாறாக கொஞ்சம் போல ரூபாய் தாள்கள்தான் இருந்தன.பதறியடித்து அவர்கள்முத்துமணியிடம் வந்து கேட்டபோது, உங்களை கடவுள் ஆசிர்வதிக்கவில்லை என்று தெரிகிறது. அடுத்த முறைநிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறி மறுபடியும் மறக்காமல் விபூதி கொடுத்து அனுப்பியுள்ளார்முத்துமணி.
இப்படியே கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நடத்தி வந்துள்ளார் முத்துமணி என்று தெரிகிறது. இந்த நிலையில்வேதமுத்து சேர்வை என்பவரின் மகன் அல்போன்ஸ் சமீபத்தில் முத்துமணியின் பக்தர் ஆனார்.ஆனால்,முத்துமணியின் நடவடிக்கைகளில் இவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தேனி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி. அமல்ராஜ்உத்தரவின் பேரில், போலீஸார் முத்துமணியை கைது செய்தனர். அவருடன் ஒரு பெண் உள்பட 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர். தன்னுடைய ஏமாற்று வித்தையைப் போலீசாருக்குச் செய்தும் காண்பித்தார் இந்தப் போலிச்சாமியார்.
இவர்களிடமிருந்து ரூ.15,000 பணம், டிராக்டர், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல்செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications