குஜராத்: கல்லூரி ஆசிரியர் உயிருடன் எரித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மேலும் 6 பேர் பலியானதையடுத்து, கடந்த 3 நாட்களில்இறந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆனது.

தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இன்று காலை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது,சர்கஜ் ரயில் நிலையத்தில் அவரை வழிமறித்த ஒரு வன்முறைக் கும்பல், அவரை அங்கேயே உயிருடன் எரித்தது.

இச்சம்பவத்தில் அந்த ஆசிரியர் உயிருடன் எரிந்து கரிக்கட்டையானார். இந்த ஆசிரியர் ஒரு முஸ்லீம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அந்த வன்முறைக் கும்பல் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்படியும் கும்பல்கலைந்து போகாமல் இருக்கவே, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறைக் கும்பலை சிதறி ஓடச் செய்தனர்.

இதற்கிடையே வேஜால்பூர் பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் வன்முறைக் கும்பலால்கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். அப்பகுதியில் சென்ற வாகனங்களையும் வன்முறைக் கும்பல்தடுத்து நிறுத்தி கொளுத்தியது.

இந்த வன்முறைக் கும்பல் மீது போலீசார் சராமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் குண்டு பாய்ந்துஇறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

அகமதாபாத் நகரம் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் உள்ளது. நேற்று (திங்கள்கிழமை) இரவு கலுப்பூர்பகுதியில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது.

கற்களை எறிந்து கொண்டிருந்த இந்தக் கும்பல், திடீரென்று நாட்டு வெடிகுண்டுகளை எறிந்தது. இந்தக் குண்டுத்தாக்குதலில் ஐந்து போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டு வீச்சு காரணமாக அப்பகுதியிலிருந்த பல கடைகளும் வீடுகளும் பற்றி எரிய ஆரம்பித்தன.

இதையடுத்து அந்த வன்முறைக் கும்பலைக் கலைப்பதற்காகப் போலீசார் 119 கண்ணீர் புகைக் குண்டுகளைவெடிக்கச் செய்தனர்.

இந்த கலுப்பூர் பகுதியில் இன்று பகலிலும் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் மூன்று பேர் கத்தியால் குத்திப்படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ஜூஹுபுரா பகுதியிலும் ஒரு ஒட்டக வண்டிக்காரரைக் கடத்திக் கொண்டு சென்ற வன்முறைக்கும்பல், அவரை ஒரு பண்ணையில் அடைத்து வைத்து உயிரோடு எரித்துக் கொன்று, பின்னர் அவருடைய கருகியஉடலை அருகிலிருந்த கிணற்றுக்குள் எறிந்து விட்டு ஓடிவிட்டது.

லோக்சபாவில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு:

இதற்கிடையே லோக்சபாவில் குஜராத் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அத்வானியின் பேச்சை எதிர்த்துஅமளியில் ஈடுபட்ட எதிர்க் கட்சிகள், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

குஜராத்தின் பல இடங்களிலும் செயல்பட்டு வந்த நிவாரண முகாம்கள் மூடப்பட்டு வருவதாகப் பத்திரிக்கைகளில்செய்திகள் வருவதாக எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டனர்.

ஆனால் இது தொடர்பாக எந்த விதமான தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று அத்வானி கூறினார். மேலும்இது தொடர்பாகப் பேச விரும்பாத அவர், அவையிலிருந்து வெளியேறினார்.

இதனால் கொதிப்படைந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் லோக்சபாவை விட்டு வெளிநடப்புசெய்தனர்.

அத்வானியை சந்தித்தார் கில்:

இந்நிலையில் சமீபத்தில் குஜராத் முதல்வரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட கே.பி.எஸ். கில், இன்றுமாலை அத்வானியை சந்தித்துப் பேசினார்.

கடந்த இரண்டு நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் பல பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார்பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பியான கில்.

இதையடுத்து இன்று மாலை அத்வானியைச் சந்தித்த கில், குஜராத்தில் வன்முறையை அடக்குவதற்கானவழிமுறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறினார்.

1980களில் பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறைகளை அடக்கி ஒடுக்கியவர் கில் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+