18ம் தேதி முதல் ஜெ. சூறாவளி பிரசாரம்
சென்னை:
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வரும் 18ம் தேதி தனது சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்றுதொகுதிகளிலும் அதிமுக தன் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
சைதாப்பேட்டையில் நடிகர் ராதாரவியும், வாணியம்பாடியில் கட்சியின் விவசாயப் பிரிவுச் செயலாளர்வடிவேலுவும், அச்சிறுப்பாக்கத்தில் பூவராகமூர்த்தியும் போட்டியிடுகின்றனர்.
இவ்வேட்பாளர்களை ஆதரித்து வரும் 18ம் தேதி முதல் ஜெயலலிதா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
முதலில் வாணியம்பாடியில் பிரசாரம் செய்யும் ஜெயலலிதா, 18 முதல் 20ம் தேதி வரை அங்கு இருப்பார்.
அதன் பின்னர் 22 முதல் 24ம் தேதி வரை அச்சிறுப்பாக்கத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்கிறார்.
கடைசியாக 26 முதல் 28ம் தேதி வரை சைதாப்பேட்டையில் நடிகர் ராதாரவியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அதிமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications