இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு:
இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் இடையே காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
கரி-கர்மரா மற்றும் சப்ஸியன் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்துதுப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நான்குடிரக்குகள் நின்று கொண்டிருந்தன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில்அவை நின்று கொண்டிருந்தன.
விரைந்து செயல்பட்ட இந்தியப் படையினர் பீரங்கி மூலம் அந்த வாகனங்கள் மீது பயங்கரமான தாக்குதலைநடத்தினர். இந்த அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான இரண்டு டிரக்குகள் அடியோடுதகர்க்கப்பட்டன.
நீண்ட நேரத்திற்கு அவை தீப்பிடித்து வெடித்துச் சிதற ஆரம்பித்ததை வைத்தே, அந்த டிரக்குகள்வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே நடமாடியது தெரியவந்தது.
இந்தத் தாக்குதல் நேற்றிரவு சுமார் 10 மணிக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் தரப்பினரும் பதில்தாக்குதலை நடத்தினர். இதனால் அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும்ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதற்கிடையே ஆர்னியா பகுதியில் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிஒருவன் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவனிடமிருந்து சில வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தியா-பாக். போர் மூளுமா?
இதற்கிடையே தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிப்பதற்கானவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவரான இஷானுல் ஹக் அந்நாட்டுஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த ஒரு சில வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் என்று பாகிஸ்தான் ராணுவகமாண்டர்களின் மாநாட்டின்போது அவர் கூறியதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் சில பத்திரிக்கைகள்தெரிவித்துள்ளன.
இந்தியாவின் ராஜஸ்தான் எல்லைப்புறப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் இந்தியா போர்ப் பயிற்சிகளை நடத்திவருகிறது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களை இந்தியா குவித்துவைத்துள்ளது.
இதையடுத்தே போர் மூள்வதற்கான வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார் என்று தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications