தேனி அருகே 8 கொத்தடிமைகள் தப்பினர்
தேனி:
தேனி மாவட்டம் தலி கிராமத்தில் தேங்காய் நார் உரிக்கும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 4குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து, தேனியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
நல்ல உணவு மற்றும் சம்பளம் தருவதாக கூறி, சின்னமனூரில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஆதி திராவிட சமூகத்தைச்சேர்ந்த எட்டு பேர் தலியில் உள்ள நார்த் தொழிற்சாலைக்குச் கூட்டிச் செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சென்ற அவர்களுக்கு நல்ல உணவோ உரிய சம்பளமோ கிடைக்கவில்லை. மாறாக அற்பமானசம்பளத்தைக் கொடுத்து, அவர்களை ஒரு நாளுக்கு 16 மணி நேரம் வேலை செய்யச் சொல்லி அந்தத்தொழிற்சாலையின் முதலாளி கொடுமைப்படுத்தியுள்ளார்.
தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியே செல்லவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த எட்டு கொத்தடிமைகளும் சமீபத்தில் தகுந்த நேரம் பார்த்து, அந்த நார்த்தொழிற்சாலையிலிருந்து தப்பி ஓடி வந்தனர்.
தப்பி வந்த அவர்கள் நேராக தேனியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். கட்சிநிர்வாகிகள் அவர்களை தேனி மாவட்ட கலெக்டரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இவர்களில் ஒருவருக்கு தப்பி வரும்போது காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தப்பி வந்த இந்தக் கொத்தடிமைகளுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் முயற்சியில் மாவட்டநிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications