தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
சென்னை:
தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை விற்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ ஏன் அவற்றைவைத்திருக்கவோ கூட தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம்விதிக்கப்படும். அவற்றைப் பயன்படுத்தினால் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை பைன் கட்ட நேரிடும்.
இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் கூட ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்தவேண்டும் என்றும் இந்தச் சட்ட மசோதா தெரிவிக்கிறது.
மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரான மோகன் இந்தப் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க வகைசெய்யும் மசோதாவை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.
பிளாஸ்டிக் ஒரு மட்கிப் போகாத பொருளாக இருப்பதால், அது சுற்றுச்சூழலுக்குப் பல சீர்கேடுகளைவிளைவிக்கிறது.
தேவையில்லாமல் சாலைகளிலும் குப்பைகளிலும் எறியப்படும் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடுமண்ணாக மட்காமல் இருந்து, அப்படியே கிடக்கும்.
இதனால் மழை நீர் சரியாக பூமிக்கு அடியில் சென்று சேர்வதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாகக்குறைந்து கொண்டே போகிறது.
சுற்றுச்சூழலுக்குப் பல்வேறு சீர்கேடுகள் இவ்வாறு ஏற்படுவதையடுத்தே பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைவிதிக்கும் இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படுவதாக மோகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பெரிய பெரிய ஓட்டல்களிலிருந்து சாதாரண வீடுகள் வரை இனி யாரும் பிளாஸ்டிக் டம்ளரைக்கூட வைத்திருக்க முடியாது.
குளியலறையில் உள்ள சோப்பு டப்பாவிலிருந்து சாப்பிடுவதற்காக நாம் உட்காரும் சேர்கள் வரை அனைத்தும்பிளாஸ்டிக் பொருட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications