திமுக- அதிமுக: நடுநிலை வகிக்க ஆரம்பித்திருக்கும் ரஜினி
சென்னை:
பாபா படத்தின் முதல் நாள் வசூலின் ஒரு தொகையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ள கோவில் அன்னதான திட்டத்திற்குநன்கொடையாக கொடுப்பதென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இந்த நன்கொடையை அவரே நேரில் சென்றுகொடுக்கவுள்ளார்.
ஜெயலலிதா முதல் முதலாக முதலமைச்சராக பதவியேற்றபோது ரஜினிக்கும் அவருக்கும் லடாய் ஏற்பட்டது. இருவரின் வீடுகளும்அருகாமையில் இருந்ததால் போலீஸ் கெடுபிடி காரணமாக கருத்து வேறுபாடு முற்றியது.
இந் நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக போடப்பட்ட போக்குவரத்து நெரிசலில் , ரஜினியும் சிக்கி தனது வீடு வரைநடந்தே வந்தார். மன்னன் படத்தில் ஆணவம் நிறைந்த பெண்ணை அடக்குவதாக வந்த காட்சிகளும் பரபரப்பாக பேசப்பட்டன.மேலும், பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சால், அந்த படத்தின் தயாரிப்பாளரும் அதிமுக நிர்வாகியுமாகஇருந்த ஆர்.எம்.வீரப்பன் கட்சியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார்.
பின்னர், 1996 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி வந்தால், தமிழகத்தைஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று தி முகவுக்கு ஆதரவாக சன் டிவியில் பேசினார். மேலும், காங்கிரஸில் இருந்து பிரிந்தமூப்பனார் , 96 சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்ததும் ரஜினியின் முயற்சியால் தான்.
அந்த தேர்தலில் ரஜினியின் ஆதரவு கிடைத்ததால், பர்கூரில் ஜெயலலிதாவே கூட தோற்றுப் போனார். பின்னர் நடந்த திமுகஆட்சியிலும் திருப்தி ஏற்படாத ரஜினி, யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யப் போவதில்லை என்று உனர்ந்துநடுநிலை வகிக்க தொடங்கினார்.
ஆனால், மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பெரும் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது ரஜினியை திகைக்கவைத்துவிட்டது. இதையடுத்து அவர் ஜெவுடன் மோதலை நிறுத்த ஆரம்ம்பித்துவிட்டார். ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றுஜெயலலிதா மீண்டும் முதல்லரான பின், ரஜினி வாழ்த்தி அனுப்பிய. பூங்கொத்து ஜெயலலிதாவிடம் வந்தது. ஜெயலலிதாவும்அதை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த ஜெயலலிதா உத்தரவிட்டதை தொடர்ந்து, ஜெயயலிதாவுக்கு ரஜினி நன்றிதெரிவித்துப் பேசினார்.
இப்போது, பாபா பட முதல் நாள் வசூலின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஜெயின் அன்னதான திட்டத்துக்கு வழங்க முடிவுசெய்துள்ளார்.
அதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியிடம் பாபா கதை குறித்து விவாதித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ரஜினி. இதன் மூலம்திமுக மற்றும் அதிமுக இடையே நடுநிலை வகிக்க ஆரம்பித்துள்ளார் ரஜினிகாந்த். தனியாக அரசியலில் குதிக்கும் வரை இதேநிலையைக் கடைபிடிக்குமாறு அவரது அரசியல் ஆலோசகர் துக்ளக் சோ கொடுத்த அட்வைஸ் தான் இதற்குக் காரணமாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications