ஸ்டாலின் பதவியை பறிக்கும் சட்ட மசோதா நாளை நிறைவேற்றம்
சென்னை:
சென்னை மாநகர மேயர் மற்றும் திமுக எம்.எல்.ஏவான மு.க.ஸ்டாலினின் ஏதேனும் ஒரு பதவியை பறிக்க வகைசெய்யும் சட்ட மசோதா நாளை தமிழக சட்டசபையில் நிறைவேறுகிறது.
ஸ்டாலினின் எம்.எல்.ஏ. பதவி அல்லது சென்னை மாநகர மேயர் பதவியைப் பறிக்கும் நோக்கத்திலேயேகொண்டுவரப்பட்ட இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் சட்டசபையில் கடந்த ஏப்ரல்22ஆம் தேதி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன.
இந்த மசோதா அரசிதழில் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் வகித்து வரும் மேயர் அல்லது துணைமேயர் பதவி பறிக்கப்படும்என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நாளை இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள்நாளை முடிந்தவுடன், இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. நாளை மறுநாள் (மே 9ம் தேதி) தமிழகசட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உலக மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றுள்ள ஸ்டாலின், நாளைமறுநாள் சென்னை திரும்புகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications