இடைத் தேர்தல்: துணை ராணுவத்தை அனுப்ப திமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் நியாயமாகவும் சுமூகமாகவும் வாக்குப்பதிவு நடப்பதற்குதுணை ராணுவத்தையும் மத்திய பார்வையாளர்களையும் அனுப்ப வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனரைதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோவை நேரில் சந்தித்து திமுக எம்.பிக்களானகுப்புசாமி, கிருஷ்ணசாமி, சண்முகசுந்தரம், விடுதலை விரும்பி, ஆதி சங்கர் மற்றும் வெற்றிச் செல்வம் ஆகியோர்அளித்த அனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் நியாயமான முறையில் தேர்தல்நடைபெறாது என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலே நல்ல உதாரணமாகும்.

எனவே இந்த மூன்று தொகுதிகளிலும் நியாயமாகவும் சுமூகமாகவும் தேர்தல் நடைபெறுவதற்காக துணைராணுவத்தை அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்.

மேலும் இந்தத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காக தேர்தல்பார்வையாளர்களையும் அனுப்ப வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+