1,000 பஞ்சாப் கமாண்டோக்கள் குஜராத்துக்கு விரைவு
அகமதாபாத்:
குஜராத் வன்முறைகளை அடக்குவதற்காக பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில்லின்தலைமையில் 1,000 பஞ்சாப் கமாண்டோக்கள் அங்கு விரைந்துள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த வாரம் மத்திய அரசால் கில்நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து குஜராத் விரைந்த கில், அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நேற்று டெல்லி விரைந்து உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்துப் பேசினார்.
பஞ்சாப்பில் நன்கு பயிற்சி பெற்ற 1,000 ரிசர்வ் போலீஸ் கமாண்டோக்களை குஜராத்துக்கு அனுப்பிவன்முறைகளை ஒடுக்கலாம் என்று அப்போது அவர் அத்வானியிடம் கூறியதாகத் தெரிகிறது.
பஞ்சாப் அரசும் 1,000 கமாண்டோக்களை அனுப்ப முன் வந்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் உள்துறைச்செயலாளரிடம் ஏற்கனவே கில் கூறியிருந்தார்.
இதையடுத்து 1,000 பஞ்சாப் கமாண்டோக்களுடன் நேற்று மாலை குஜராத்துக்குத் திரும்பியுள்ளார். வன்முறைப்பகுதிகளில் கலவரக்காரர்களை அடக்கி ஒடுக்குவதில் நல்ல அனுபவம் கொண்ட இந்த கமாண்டோக்கள் தற்போதுவன்முறை தாண்டவமாடும் அகமதாபாத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடர்கிறது - மேலும் 6 பேர் பலி:
இதற்கிடையே குஜராத்தில் தொடரும் வன்முறைக்கு கடந்த 4 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 24ஆகஉயர்ந்துள்ளது.
அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில் நேற்றிரவிலிருந்து நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது போலீசார்நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
பிலோடா நகரில் முஸ்லீம் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications