பொன்முடி அலுவலகம் தாக்கப்பட்டதா? - ஜெ. சந்தேகம்
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பொன்முடியின் அலுவலகத்தின் மீது உண்மையிலேயே தாக்குதல் நடந்ததா என்பது குறித்துசந்தேகம் எழுவதாக தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் சட்டசபை உறுப்பினர் அலுவலகம், கடந்த சில நாட்களுக்கு முன் மர்மஆசாமிகளால் பூட்டு உடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்து பொன்முடி போலீசாரிடம் புகார்கொடுத்துள்ளார்.
ஆனால் இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை என்று கூறி நேற்று சட்டசபையில் பொன்முடிஇதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது:
விழுப்புரத்தில் அமைந்துள்ள தன்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் நுழைந்து,அங்குள்ள கண்ணாடிகள், நாற்காலிகள், விளக்குகள் போன்றவற்றை தாக்கியதாகவும், அங்குள்ள மோட்டாரைதிருடிச் சென்று விட்டதாகவும் விழுப்புரம் தாலுகாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பொன்முடி புகார்கொடுத்துள்ளார்.
புகார் அளிக்கப்பட்ட அன்றே பகல் 12.15க்கு, இந்த புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில், வணிக வளாகம், பஸ் ஸ்டாண்ட், மதுபானக்கடைபோன்றவை அமைந்துள்ள நெரிசலான பகுதியில் சம்பவம் நடந்துள்ளது.
மேலும் விசாரணையின்போது சம்பவம் நடந்த இடம் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் தூசிபடிந்திருந்ததாகவும் அங்குள்ள எம்.எல்.ஏ. மற்றும் கட்சித் தலைவர்களின் படங்கள் உடைக்கப்படாமல் இருந்ததும்தெரிய வந்தது.
சம்பவம் நடப்பதற்கு முன்பே விளக்குகள் போன்றவை திருடப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மோட்டார்வைத்திருந்த இடம் தூசியாக இருந்ததால் அதுவும் சம்பவம் நடப்பதற்கு முன்பே திருடப்பட்டிருக்கலாம் என்றுதெரிகிறது.
மேலும் எம்.எல்.ஏ. அலுவலகம் வழிப்போக்கர்கள் தங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தஅலுவலகத்தின் சுற்றுப்புறத்தில் நள்ளிரவு வரை ஆள்நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.
எனவே அலுவலகம் தாக்கப்பட்டது திட்டமிட்ட செயலா என்பது பற்றி ஐயம் எழுந்துள்ளது. எனினும்குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் ஜெயலலிதா.
முன்னதாக நிதி அமைச்சர் பொன்னையன் பேசுகையில், பொன்முடியின் அலுவலகம் தாக்கப்பட்டிருப்பதில்எந்தவிதமான சதிச் செயலும் இல்லை என்று கூறினார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications