மின்வெட்டு தொடராது: அமைச்சர் உறுதி
சென்னை:
தமிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டு தற்காலிகமானது தான். இன்னும் 10 நாட்களில் அது சரி செய்யப்படும்என்று தமிழக சட்டசபையில் மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அறிவிக்கப்படாமல் மின் வெட்டு ஏற்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
வடசென்னை மின் நிலையத்தில் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது.
தற்போது கர்நாடகாவிலுள்ள கெய்கா மின் நிலையத்திலிருந்து 110 மெகாவாட் மின்சாரமும், கேரளாவில் உள்ளகாயன்குளம் மின் நிலையத்திலிருந்து 120 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.மேலும் ஆந்திராவிடமும் 50 மெகாவாட் மின்சாரம் கேட்டுள்ளோம்.
இவை தவிர மத்திய மின்துறை அமைச்சர் சுரேஷ் பாபுவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசிய போது அவர்தமிழகத்திற்கு 335 மெகாவாட் மின்சாரம் அதிகமாக தருவதாக உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டு தற்காலிகமானது தான். இன்னும் 10 நாட்களில் அது சரி செய்யப்படும்.
தமிழகத்தில் இப்போது 6,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதையதேவை 6,750 மெகாவாட்டாக இருப்பதால் தான் இந்த பிரச்சினை.
இன்னும் சில நாட்களில் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை தமிழகமே தயாரிக்கும் என்றார் நயினார்நாகேந்திரன்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications