தரையில் விழுந்து நொறுங்கிய ஜாகுவார் போர் விமானம்
அம்பாலா:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் பயிற்சியின்போது தரையில் விழுந்துநொறுங்கியது. இதில் விமானி உயிரிழந்தார்.
இது குறித்து ராணுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்பாலா விமானப் படைத் தளத்தில் இருந்து இந்த விமானம் இன்று காலை கிளம்பியது. இதனை பிளையிங்ஆபிசர் பல்லார்வால் ஓட்டிச் சென்றார்.
ரன்வேயில் இருந்து கிளம்பிய அந்த விமானம் போதிய உயரத்தை எட்டாமல் சுற்றுப் புற இரும்பு வேலியில்உரசியவண்ணம் சென்றது.
உடனடியாக அது தரையில் மோதியது. விமானத்தில் முழு அளவில் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்ததால் உடனேஅது வெடித்தது.
விமானம் முழுவதும் தீப் பிடித்தது. இதையடுத்து விமானப் படைத் தளத்தில் இருந்த 5 தீயணைப்பு வண்டிகள்விரைந்து சென்றன. வெகு நேரம் போராடி தான் தீயை அணைக்க முடிந்தது.
இதில் விமானி பல்லார்வால் பலியானார். இது குறித்து முழு விவரம் தர விமானப் படையினர் மறுத்துவிட்டனர்.விமான விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கூட விமானப் படை தகவல் தெரிவிக்கவில்லை.
ஜாகுவார் ரக விமானங்கள் வானில் இருந்து தரைத் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படுபவை. மிகக் குறைந்தஉயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானங்கள் ரேடார்கள் கண்ணில் சிக்காமல் பறக்கும் திறனுடையவை.
மிக அதிக எடையுள்ள குண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் மிக்கவை. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தவிமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிஸ்க் நிறுவனம் தயாரித்து வருகிறது.
வழக்கமாக மிக் ரக விமானங்கள் தான் விபத்துக்குள்ளாவது வழக்கம். கடந்த வாரம் கூட ஒரு மிக் விமானத்தின்என்ஜின் கழன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் தரையில் இருந்த 7 பேர் இறந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications