M.Sc Genomic

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. ஜீனோமிக் என்ற மரபணு குறித்து பட்டமேற்படிப்புக் கல்விதொடங்கப்படவுள்ளது.

இந்தக் கல்வியை அளிக்க தேசிய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) தேர்ந்தெடுத்துள்ள ஒரே கல்வி மையம் மதுரைகாமரஜர் பல்கலைக்கழகம் தான் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பி.கே.பொன்னுசாமி கூறுகையில்,

எம்.எஸ்.சி ஜீனோமிக் சயின்ஸஸ் படிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கும். இந்தப் படிப்பில் 10 மாணவர்கள் மட்டுமேசேர்த்துக் கொள்ளப்படுவர். இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டும் நேர்முகத் தேர்வு நடத்தியும் மாணவர்கள்தேர்ந்தெடுக்கப்படுவர். விரைவில் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.

இந்தக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக யு.ஜி.சி. அடுத்த 5 வருடங்களுக்கு 30 கோடி ரூபாய் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்தஆண்டுக்காக ரூ. 5 கோடியை வழங்கிவிட்டது. இன்னும் 4 வருடங்களில் 25 கோடியை யு.ஜி.சி. தரும்.

இந்தக் கல்விக்குத் தேவைப்படும் டி.என்.ஏ. மைக்ரோ அர்ரே எனப்படும் ஆராய்ச்சிக்காக நவீன கருவிகள்அமைக்கப்படவுள்ளன. இந்த படிப்பில் தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்களின் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சியும் இடம் பெறும்.நோய்த் தாக்குதலை சமாளிக்கும் தாவரங்களை ஜீன் மாற்றங்கள் மூலம் உருவாக்கும் சோதனைகளும் இந்தப் படிப்பில் இடம்பெறும்.

ப்ளூ கிரீன் ஆல்கே எனப்படும் பாசி வகை குறித்த முழுமையான ஆராயிச்சியில் இந்தக் கல்வி பயிலும் மாணவர்கள் ஈடுபடுவர்.பச்சைநீல ஆல்காவை பற்றிய படிப்பிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. டி.பி., இருதயநோய், தொழுநோய் தாக்குதலி ஜீன்களின் பங்குகுறித்த ஆய்வும் இடம்றுெம்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் டி.பியினால் பாதிக்கப்படுவது குறித்தும் அதைத் தடுக்க உதவும் புரோடீன்கள் உற்பத்திகுறித்த ஆராய்ச்சிக்கு இந்தக் கல்வி முக்கியத்துவம் தரும்.

இந்த படிப்பில் சேர தகுதி: இந்தப் படிப்பில் சேர பி.எஸ்.சி. உயிரியல், விலங்கியல், தாவரவியல், பிஸிகல் கெமிஸ்ட்ரி, அல்லதுமருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ தாவரங்கள் குறித்த பட்டயப் படிப்பையும், இன்ஸ்ட்ரூமென்டேஷன் தொடர்பான பட்ட மேற்படிப்பு தொடங்கவும்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என்றார் துணை வேந்தர் பொன்னுசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+