2 நாட்களுக்கு சென்னையை வெயில் வறுத்தெடுக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு கடுமையான வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில்கடுமையான வெப்பம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக அணல் காற்றும் அடித்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் சென்னை சாலைகளில் மனித நடமாட்டமே குறைந்து போய்விட்டது.
இந் நிலையில், இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் வட கடலோர பகுதிகள், சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில்கடுமையான வெப்பம் நிலவும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இருப்பினும் மாலை நேரங்களில் கோடை மழை அல்லது பலத்தகாற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications