தமாகா-காங். இணைப்பு: இன்று இறுதிக் கட்ட பேச்சு
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இணைப்பது தொடர்பான இறுதிக் கட்டபேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விரைவில் இணைகிறது. அநேகமாக ஜூலை மாதத்தில் இந்தஇணைப்பு இருக்கும் என்று தெரிகிறது.
அதற்கு முன்பாகப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இணைப்புக்குப் பின் தற்போதுதமாகாவில் உள்ள "பெருந்தலைகளுக்கு" என்னென்ன பதவிகளை வழங்கலாம் என்பதற்கான பேச்சுவார்த்தைதற்போது வெகு தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் விவகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் பிரதிநிதியான ரமேஷ் சென்னிதாலா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் இன்று காலைசென்னை வந்து சேர்ந்தனர்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசனுடன் அவர்கள் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறார்கள். இதில்ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக யார் இருப்பது என்ற முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுடனும் இவர்கள் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications