சிறுபான்மையினருடன் கே.பி.எஸ். கில் நேரில் சந்திப்பு
அகமதாபாத்:
குஜராத் மாநில முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. கேபிஎஸ் கில்இன்று இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
முஸ்லீம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். அங்கு வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் தள்ஆகிய அமைப்புகள் குஜராத் பா.ஜ.க. அரசு-போலீஸ் உதவியுடன் நடத்திய வன்முறையில் சிறுபான்மையினர்திட்டமிட்டுத் தாக்கப்பட்டன.
900 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளனர். லட்சகணக்கான இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும்எரிக்கப்பட்டுவிட்டன. ஊர்களைவிட்டு உயிருக்கு அஞ்சி குடும்பத்துடன் ஓடிப் போய்விட்டனபல்லாயிரக்கணக்கான குடும்பங்கள். லட்சக்கணக்கானோர் முகாம்களில் உள் நாட்டிலேயே அகதிகளாக வாழந்துவருகின்றனர்.
இந் நிலையில் தான் மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என இந்தியா முழுவதும் குரல் எழுந்தது.அதற்கு மத்திய பா.ஜ.க. அரசு செவி சாய்க்கவில்லை.
ஆனால், உலக அளவில் கண்டனக் குரல்கள் எழுந்ததால் நாட்டின் பெயர் வெளிநாடுகளில் கெட்டது.இதையடுத்துத் தான் கே.பி.எஸ். கில்லை குஜராத்துக்கு அனுப்ப மத்திய அரசு முன் வந்தது.
அவர் தவறு செய்த மாநில போலீஸ் அதிகாரிகள் பலரை பந்தாடிவிட்டார். போலீஸ் மூத்த அதிகாரிகளைபாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருடன் பேச்சு நடத்தவும் ஆணையிட்டார்.
இப்போது தானே இது போன்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். குஜராத்தின் அனைத்துமாவட்டங்களில் இருந்தும் அகமதாபாத் வந்திருந்த முஸ்லீம் சமுதாயத் தலைவர்களை இன்று அவர் சந்தித்துப்பேசினார்.
வன்முறை தொடர்பாக அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களும் முழுமையாக பதிவுசெய்யப்படும் (பல்வேறு கற்பழிப்பு, கொலை, வீடு எரிப்பு வழக்குகளை மாநில போலீசார் பதிவு செய்யமறுத்துவிட்டது நினைவுகூறத்தக்கது) என அவர்களிடம் கில் உறுதியளித்தார்.
தங்களை போலீசாரே காட்டிக் கொடுத்ததாகவும் தாக்குதலுக்கு போலீஸாரே துணை நின்றதாகவும் அவர்கள்கில்லிடம் கண்ணீர் மல்ல எடுத்துக் கூறினர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரினர்.
தேசிய சிறுபான்மை கமிஷன் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications