தமிழர் பகுதிகளில் உளவு விமானங்கள்: புலிகள் புகார்
கொழும்பு:
வன்னி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படையின் உளவு பார்க்கும் விமானியில்லா விமானங்கள்(unmanned aerial vehicles) அடிக்கடி பறந்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கொடுத்துள்ள இந்தப் புகாரில்,
இந்த விமானங்களை முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி உளவு பார்ப்பதன்மூலம் போர் நிறுத்த ஒப்பந்ததின் அடிப்படையையே இலங்கை விமானப் படை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தமிழர்கள் நிறைந்த நகர்கள், கிராமங்களில் இந்த விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. இதனால்மக்கள் பீதியடைந்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள் அச்சத்தில் உறைகின்றனர்.
முன்பு போர் நடந்த காலங்களில் இந்த உளவு விமானங்கள் வந்துவிட்டுப் போன சில மணி நேரங்களில் பலத்தவிமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் மீது பலத்த குண்டு வீச்சுகள் நடந்துள்ளன. அதே போலஇப்போதும் நடக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.
இது நம்பிக்கையைக் குலைக்கும் செயலாகும் என்று தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
முன்பு தமிழ் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது. அது போல இப்போது விமானப்படையும் அமைதி முயற்சியைக் குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக புலிகள் கூறுகின்றனர்.
ஆனால், புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த படகுகளைத் தான் தாக்கினோம் என்று இலங்கைக் கடற்படை கூறியது.
அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திரிகாவில் தொடங்கி பாதுகாப்பு வட்டாரங்களிலும் எதிர்ப்பு நிலவி வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications