நாச வேலை காரணமாக விபத்துக்குள்ளான இந்திய ரயில்
பாட்னா:
டெல்லியிலிருந்து பாட்னா சென்று கொண்டிருந்த ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேசத்தில் நேற்றுவிபத்துக்குள்ளானது. இதற்கு நாச வேலைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளதாக ரயில்வேத்துறைஅமைச்சரான நிதிஷ் குமார் கூறினார்.
உ.பியில் ஜானுப்பூர் அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த ரயிலின் 11 பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டன. மிக வேகமாக சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் பெட்டிகள் விபத்தில் அப்பளம் போல நொறுங்கின.சம்பவ இடம் மிகப் பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த இடம்மாதிரி இரும்புச் சிதறல்களுடன் கிடந்தது.
இந்த பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவருகின்றனர்.
சம்பவ இடத்தில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த விபத்து நாசவேலை காரணமாகவேநடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இரு தண்டவாளங்களையும் இணைக்கும் பிஷ் பிளேட்டுகள்அகற்றப்பட்டிருந்தன. மேலும் ஒரு தண்டவாளத் துண்டும் 2 மீட்டர் தொலைவில் தனியாகக் கிடந்தது.
இதனால் இது நாசவேலை காரணமாக நடந்துள்ள விபத்து என்று தான் கருதப்படுகிறது.
தண்டவாளத்தில் வேறு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்று வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள்தொடர்பாளரான தேவேந்திர சந்து கூறினார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஓரிருநாட்களில் முடிவடைந்துவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications