3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ராணுவக் குடியிருப்புக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் மேற்கொண்டபதிலடித் தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களைக்கொல்ல துப்பாக்கிகள் தவிர பலம் வாய்ந்த குண்டுகளையும் ராணுவம் பயன்படுத்தியது.
மேலும் இரண்டு தீவிரவாதிகள் அந்தக் குடியிருப்புப் பகுதியிலேயே பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவருமே ராணுவ உடையை அணிந்து வந்திருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications