இந்துக்களை மதிப்பவர் ஜெ.: ராமகோபாலன்
ஆம்பூர்:
இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்வரான ஜெயலலிதா சமமாக மதிக்கிறார் என்று இந்துமுன்னணித் தலைவரான ராம கோபாலன் கூறினார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத் கோத்ரா ரயிலில் இந்து பக்தர்கள் வந்த பெட்டிக்கு தீ வைத்ததை வன்மையாக கண்டித்தவர் ஜெயலலிதா.
இந்துக்களின் தீ மிதித்தல் போன்ற வேண்டுதல்களை கருணாநிதி கிண்டல் செய்து வருகிறார். ஆனால் ஜெயலலிதாஇந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறார்.
கோவில்களில் அன்னதானத் திட்டம், குழந்தைகளுக்கு ஆன்மீக கல்வி, 500 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தகாஞ்சி சுவாமிகளின் தலைமையில் குழு, கோவில் வருமானத்தை அதிகரிக்க குழு, கோவில்களில் அனைத்துவிளக்குகளும் எரிவதற்கான திட்டம் போன்ற பல திட்டங்களை ஜெயலலிதா தீட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பொடோ சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்துள்ளார். கோவில் சொத்துக்களைஆக்ரமிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்ற திட்டம் தீட்டி வருகிறார்.
கோவில்கள் சமுதாயத்தின் உயிர்நாடி மட்டுமல்ல. அவைதான் நீதிமன்றம், கல்விக்கூடம், கலைகளின்பாதுகாப்பிடம், மக்களை ஒருமைப்படுத்தும் மையம் எல்லாமே. கோவில்களை மதித்து முன்னேற்றுபவரேஉண்மையான மக்கள் தொண்டர்.
எனவே, உண்மையான மக்கள் தொண்டராகவே ஜெயலலிதா விளங்குகிறார் என்றார் ராமகோபாலன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications