அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் செங்கை சிவத்தின் மனு தள்ளுபடி
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்த முன்னாள் திமுகஎம்.எல்.ஏவான செங்கை சிவத்தின் அச்சிறுப்பாக்கம் வேட்பு மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவர்களின் கதி என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக,திமுக மேலிடமே செங்கை சிவத்தை இந்த மூன்று தொகுதிகளிலும் நிறுத்தியது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஜெயலலிதா 4 தொகுதிகளில் மனுத் தாக்கல்செய்தார். இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனுத் தாக்கல் செய்ததால் அவருடைய அனைத்து மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன.
ஆனால் இதற்கு திமுகவும் கருணாநிதியும்தான் காரணம் என்று இன்று வரை ஜெயலலிதா குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொருட்டே, தற்போது மூன்று தொகுதிகளிலும் செங்கை சிவத்தை வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சொல்லி திமுக ஆணையிட்டது. ஆனால் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் மட்டும் செங்கை சிவத்தின்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டதோடு சைதாப்பேட்டையில் ஏற்றுக் கொண்டேவிட்டது.
வாணியம்பாடி குறித்து நாளை தான் அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
முதலில் அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அவருடைய வேட்பு மனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வாணியம்பாடி தொகுதியில் அவருடைய வேட்புமனுவை இன்னும் பரிசீலனை செய்யவில்லை என்று கடைசி நேரத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது.
எனவே வாணியம்பாடி தொகுதியில் செங்கை சிவத்தின் வேட்பு மனு நிலை குறித்து நாளைதான் முடிவுசெய்யப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
முன்னதாக, சைதாப்பேட்டை தொகுதியில் அவருடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரியானஜெயேந்திர சேவியர் அறிவித்தார்.
ஆனால் அச்சிறுப்பாக்கத்தில் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக் காட்டிய திமுக வழக்கறிஞரானஆர்.எஸ். பாரதி இங்கும் செங்கை சிவத்தின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல்அதிகாரியை வற்புறுத்தினார்.
1996ம் ஆண்டு தேர்தல் விதிப்படிதான் செங்கை சிவம் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்றும் அது 2001ம் ஆண்டுவிதிப்படி செல்லுபடி ஆகாது என்றும் கூறிய பாரதி இது சட்டத்திற்கு விரோதமானது என்றும் தெரிவித்தார்.
எனவே சைதாப்பேட்டை தொகுதியில் செங்கை சிவத்தின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்தே ஆக வேண்டும்என்று அந்தத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் பாரதி ஒரு ஆட்சேப மனுவை அளித்து விட்டுக் கிளம்பினார்.
ஆனாலும் செங்கை சிவத்தின் வேட்பு மனுவை எந்தவிதத்திலும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் சைதாப்பேட்டைதேர்தல் அதிகாரி.
தன்னிடம் திமுக விளையாடுவதாகக் கருதும் தேர்தல் கமிஷன் பதிலுக்கு விளையாடுவதாகத் தெரிகிறது.
முன்பு ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு செய்தது சட்டப்படி செல்லாது என்று கூறி தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது.
இப்போது 3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த செங்கை சிவத்தின் மனுவை மட்டும் சைதாப்பேட்டையில்ஏற்றுக் கொணடுள்ளது. இது திமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்த தேர்தல் கமிஷன் எந்த அடிப்படையில் செங்கை சிவத்தின் மனுவைஏற்றது என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications