அண்ணா பல்கலை புதிய துணை வேந்தராக பாலகுருசாமி பொறுப்பேற்பு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர் ஈ. பாலகுருசாமி இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெங்களூரில் உள்ள மஹாவீர் அகாடெமி ஆப் டெக்னாலஜி அண்ட் சைன்சஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகஇருந்து வந்தார் டாக்டர் பாலகுருசாமி.
அவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த இரு நாட்களுக்கு முன் அப்பல்கலைக்கழகத்தின்வேந்தரும் தமிழக ஆளுநருமான ராமமோகன் ராவ் நியமனம் செய்தார்.
இதையடுத்து இன்று காலை டாக்டர் பாலகுருசாமி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப்பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் துணை வேந்தரான டாக்டர் ஏ. கலாநிதி பொறுப்புக்களைஒப்படைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்என்று தமிழக அரசு அறிவித்த பிறகு, முதல் முறையாக இதன் துணை வேந்தராக பாலகுருசாமிநியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் பாலகுருசாமிஇருப்பார்.












Click it and Unblock the Notifications