இந்தியாவில் புலிகளுக்கு மேலும் 2 ஆண்டுகள் தடை
டெல்லி:
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து நான்கு முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வடக்கு இலங்கையில் சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களை புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்தித்தார். இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவவேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அதிமுக, காங்கிரஸ், தமாகா போன்ற கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.கடந்த ஏப்ரல் 16ம் தேதி சூட்டோடு சூடாக புலிகளுக்கு எதிரான தீர்மானத்தையும் தமிழக சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா நிறைவேற்றினார்.
இந்தத் தீர்மானத்தை மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் திமுக மட்டும் எந்தப்பக்கமும் சாயாமல் நடுநிலை வகிப்பதாகக் கூறிவிட்டது.
இந்தத் தீர்மானத்தின் படி, பிரபாகரனைப் பிடிப்பதற்காக இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்என்றும் அவரை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றும் புலிகளுக்கு எதிரான தடையைநீட்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே புலிகளுக்கு எதிரான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கடந்தஇரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி வாஜ்பாய்க்குத் தந்திஅனுப்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்றுடன் புலிகள் மீதான தடை முடிவுக்கு வந்ததையடுத்து, ஐந்தாவது முறையாக புலிகள் மீதானதடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
சட்ட விரோதத் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (1967)ன் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தஇரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தடை நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications