மதுரையில் அழகிரியின் நாட்டாமை: நடிகர் பாண்டியன் ஆவேசம்
சென்னை:
மதுரையில் அழகிரி, சென்னையில் ஸ்டாலின் என நாட்டாமை செய்து வரும் திமுகவின் முகமூடியைக் கிழித்துசைதாப்பேட்டை தொகுதியில் நடிகர் ராதாரவி வெற்றி பெறுவார் என்று நடிகர் பாண்டியன் கூறியுள்ளார்.
திமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தவர் நடிகர் பாண்டியன். சென்னை மேயர் ஸ்டாலின் கூடவே இருந்துவரும் தியாகு, சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய நடிகர் குழுவில் பாண்டியனும் இடம் பெற்றிருந்தார்.
ஆனால் ராதாரவி மற்றும் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோரது அட்வைஸ் படி இப்போது அதிமுகவில் ஐக்கியமாகிஉள்ளார் பாண்டியன்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் ராதாரவியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாககூறியுள்ளார் பாண்டியன். இதுதொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பாண்டியன் பேசுகையில்,
மதுரையில் அழகிரி அட்டகாசம் செய்கிறார், சென்னைக்கும், தமிழகத்திற்கும் ஏகபோக உரிமை என்பது போலஸ்டாலினை வளர்த்து விட்டுக் கொண்டுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் குடும்பச் சொத்தாகி விட்டது திமுக.அது தொண்டர்களை மதிக்கும் கட்சியாக இப்போது இல்லை.
பேசாமல் அதிமுகவுக்கு வந்து விடு என்று ராதாரவியும், சந்திரனும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். எனதுமனைவியும் அதிமுகவில் சேர ஆலோசனை கூறினார். இதையடுத்தே அதிமுகவில் சேர்ந்தேன்.
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராக ஜெயலலிதா திகழ்கிறார். அத்தனை பேரும் அவரைப்பாராட்டுகிறார்கள். எதிர்த்தவரை எல்லாம் ஜெயித்தவர் அவர். அவரை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளேன்.ஆனாலும் கூட தாயுள்ளத்தோடு என்னை ஏற்றுக் கொண்டார்.
சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியின் முகமூடியைக் கிழித்தெறிவோம், அதிமுகவுக்கும், "அம்மா"வுக்கும்வெற்றி தேடித் தருவோம். நானும் சைதாப்பேட்டை உள்ளிட்ட மூன்று தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்என்றார் பாண்டியன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications