இருளில் மூழ்கியது தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடப்பா-ஸ்ரீபெரும்புதூர் மின் வழித் தடத்தில் மின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சென்னை உள்படதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இருளில் மூழ்கின.

நேற்று மாலை 5 மணியளவில் கடப்பா-ஸ்ரீபெரும்புதூர் மின் வழித் தடத்தில் மின் கோளாறு ஏற்பட்டது. தென்னகமின் கட்டமைப்பான இந்த வழித் தடத்தில் கோளாறு ஏற்பட்டதால், சென்னை அணு மின் நிலையம், பேசின் பிரிட்ஜ்மின் உற்பத்தி நிலையம், வாசவி தனியார் மின் உற்பத்தி நிலையம், வட சென்னை அனல் மின் நிலையம்ஆகியவற்றில் மின் உற்பத்தி தடைபட்டது.

இதையடுத்து சென்னையின் வட பகுதிகள் மற்றும் தென் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம்தடைப்பட்டது. தமிழகத்தில் வேலூர், கரூர், ராமநாதபுரம், நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பல நகரங்களிலும்மின்சாரம் தடைபட்டது.

ஆனால் மதுரை, கோயம்புத்தூர் போன்ற மாநகரங்கள் மின் தடையிலிருந்து தப்பி விட்டன. மேட்டூர், தூத்துக்குடிஆகிய இடங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

கடுமையான வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த சென்னை மக்களுக்கு இந்த மின் தடை பெரும் அதிர்ச்சியாகஇருந்தது.

போன மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இரவு 9 மணியாகியும் மின்சாரம்வரவில்லை. இதனால் சென்னை மக்கள் வியர்வை வெள்ளத்தில் மூழ்கி அவதிப்பட்டனர். இரவு 10மணியளவில்தான் மின் விநியோகம் சரியானது.

தூத்துக்குடி மற்றும் மேட்டூர் மின் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மின்சாரத்தை வைத்துதான் அதிகாரிகள்நிலைமையை சமாளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+