"19 ஆணவங்களில் ஒன்றைக் காட்டி ஓட்டு போடுங்க"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் இடைத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்குத் தேவைப்படும் 19 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் கமிஷன்வெளியிட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டி மக்கள் ஓட்டுப் போடலாம் என்று அது அறிவித்துள்ளது.

வரும் 31 ஆம் தேதி நடக்கவிருக்கும் சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய சட்டசபைத்தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர வேறு எந்தெந்த ஆணவங்களைக் காட்டி மக்கள்ஓட்டு போடும் உரிமையை பெறலாம் என்ற பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

1.பாஸ்போர்ட்
2.டிரைவிங் லைசன்ஸ்
3.வருமானவரி அடையாள அட்டை
4.மத்திய மற்றும் மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள தொழிலாளர் அடையாள அட்டை
5.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அல்லது அதற்கு முன் துவங்கப்பட்ட வங்கி, விவசாய, அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
6.குடும்ப அட்டைகள்
7.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கென வழங்கப்பட்ட சான்றிதழ்கள்
8.மாணவர் அடையாள அட்டை
9.பதிவு செய்யப்பட்ட சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
10.ஆயுத உரிமம்
11.நடத்துனர் உரிமம்
12.முன்னாள் படை வீரர்கள் ஓய்வூதிய குறிப்பேடு
13.காலஞ்சென்ற முன்னாள் படைவீரர்களின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்
14.ரயில் மற்றும் பஸ் அனுமதி அட்டை
15.ஊனமுற்றோர்களுக்கான சான்றிதழ்
16.சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அட்டை
17.அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குடியுரிமை சான்றிதழ்
18.குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வீடு ஒதுக்கீடு கடிதம்
19.வட்டாட்சியரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ்.
மேற்கூறிய 19 ஆவணங்களில் ஏதேனும் ஒரு மூலச் சான்றிதழை அதிகாரிகளிடம் காட்டி வாக்களிக்கலாம். நகல்கள்ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களில் பிழை இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, வாக்காளர்கள் தங்கள்வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+